நடிகர் மாரிமுத்து சமீபத்தில் அளித்த பேட்டியில் பேசிய சில விஷயங்கள் சர்ச்சையாக மாறியுள்ளது.
துணை நடிகர்
இயக்குநர்கள் வசந்த், எஸ்.ஜே. சூர்யா, மணிரத்னம், சீமான் உள்ளிட்ட பலரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் மாரிமுத்து. கண்ணும் கண்ணும், புலிவால் போன்ற படங்களையும் இயக்கியுள்ளார். நடிகராக தன்னை நிரூபித்து தற்போது பல முன்னணி இயக்குநர்கள் படத்தில் நடித்து வருகிறார். வாலி, கொம்பன், திரிஷா இல்லனா நயன்தாரா, கொடி, பைரவா, எமன் போன்ற படங்கள் உட்பட 75 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். தற்போது டிவி தொடர்களிலும் நடித்து வருகிறார் மாரிமுத்து. சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் என்ற தொடரில் ஆதிமுத்து குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் மாரிமுத்து.
முதல் சர்ச்சை
இந்நிலையில், சமீபத்தில் மாரிமுத்து டுவிட்டரில் பதிவிட்ட ஒன்று சர்ச்சையில் முடிந்தது. அந்த பதிவிற்கும் தனது அப்பாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், அந்த டுவிட்டர் கணக்கு போலியானது என்றும் மாரிமுத்துவின் மகன் விளக்கமும் கொடுத்து இருந்தார். ஆனால் மாரிமுத்து ஒரு பெண் போன் நம்பர் கேட்டால் கொடுப்பதில் என்ன தவறு என கேள்வி எழுப்பினார். இந்த சர்ச்சைகள் அடங்குவதற்குள், தற்போது வேறு ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார் மாரிமுத்து.
மீண்டும் சர்ச்சை
அதாவது சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியுள்ள அவர், “தமிழ் மணப்பெண் ஆடிக்கிட்டே வந்து மணவறையில் தாலி வாங்கக்கூடாது என்று கூறியுள்ளார். கல்யாணத்தன்று பெண் தலை குணிந்து நடந்தால் தான் அழகாக இருக்கும். தலை குனிந்து நடப்பது தான் பெண்ணுக்கு அழகு என்று கூறியுள்ளார். ஆணுக்கு அரையடி பின்னே பெண் நடந்து வருவதுதான் அழகு. இது பிற்போக்கு அல்ல. முற்போக்கு என்று பேசி மாரிமுத்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ள சச்சின் பட இயக்குநர் ஜான் மகேந்திரன், மிக கேவலமான மனநிலை, பிற்போக்கின் உச்சம் என விமர்சித்துள்ளார்.