சமீப காலமாக தமன்னா யாரையோ காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் தகவல் வெளிவந்து கொண்டிருந்தது. இதற்கு பதில் கொடுத்துள்ளார் நடிகை தமன்னா.
சூப்பர் ஸ்டார் ஜோடி
கேடி என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமான நடிகை தமன்னா, வியாபாரி, கல்லூரி, அயன் போன்ற பல ஹிட் படங்களை கொடுத்தார். அதிலும் இவர் நடித்த கல்லூரி திரைப்படம் மிகப்பெரிய ஹிட் பெற்றது. அதன் பிறகு முன்னணி நடிகர்களுடன் நடிக்க துவங்கினார். படிக்காதவன், அயன், பையா, சுறா போன்ற படங்களில் நடித்து ஹிட் கொடுத்தார். சூர்யா, விஜய், தனுஷ், கார்த்தி போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த தமன்னா தற்போது ஒரு படி ஏறி சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு கன்னடம், மராட்டி என்று அனைத்து மொழியிலும் முத்திரை பதித்திருக்கும் நடிகை தமன்னா, தற்போது போலா ஷங்கர் என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.
கடுப்பில் தமன்னா
தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து ஜெயிலர் படத்தில் நடித்து வரும் தமன்னா அடுத்தடுத்து படங்களில் பிஸியாக இருக்கிறார். ஜெயிலர் படத்தை நெல்சன் திலிப் குமார் இயக்கி வருவதும் குறிப்பிடத்தக்கது. நட்சத்திர பட்டாளமே இணைந்து நடிக்கும் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில் சமீப காலமாக சமூகவலைத்தளத்தில் தமன்னாவுக்கு திருமணம் என்றும் பல காதல் கிசுகிசுகளும் பரவி வருகின்றது. இது தெரிந்த நடிகை தமன்னா தற்போது ஒரு பேட்டியில் இது குறித்து பேசியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது,” எனக்கு எதிராக நிறைய வததிகள் பரவுகின்றன. இதை எல்லாம் யார் கிளப்பி விடுகிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. அதை படிக்கும் போது சிரிப்பு தான் வருகிறது. ஒவ்வொருவருக்கும் சொந்த வாழ்க்கை இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள்” என்று காட்டமாக பதில் அளித்துள்ளார்.