சின்னத்திரையில் ஒளிப்பரப்பாகும் சீரியல்களால் மனைவிமார்கள் கணவன்மார்களை கவனிக்க மறந்துவிடுகிறார்கள் என நெட்டிசன் ஒருவர் வேதனையுடன் பதிவிட்டுள்ளது அனைவரையும் ஈர்த்துள்ளது.
முன்னணி தொடர்கள்
முன்னணி தொலைக்காட்சிகளில் சன் டிவியும், விஜய் டிவியும் பல சீரியல்களை ஒளிபரப்பி கொண்டிருக்கிறது. சன் டிவியில் ஒளிபரப்பாகும் சுந்தரி என்ற தொடர் டிஆர்பியில் டாப் ரேட்டிங்கை எட்டி உள்ளது. சுந்தரி தொடர் சன் டிவியில் திங்கள் முதல் சனி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகின்றது. அதேபோல் விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா தொடர் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகின்றது. ஏற்கனவே பாரதி கண்ணம்மா சீசன் 1 முடிவடைந்த நிலையில், கடந்த 6ஆம் தேதி முதல் பாரதி கண்ணம்மா சீசன் 2 ஒளிபரப்பாகி வருகிறது. இரண்டு விறுவிறுப்பான தொடர்களும் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாவதால் இல்லத்தரசிகள் வீட்டில் சமையல் செய்வதை விட்டுவிட்டு சீரியல் பார்க்க தொடங்கி விடுகின்றனர் என்று நெட்டிசன் ஒருவர் மனம் உடைந்து குமுறி உள்ளார்.
வாழ்க்கையில் விளையாடாதீங்க
வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்று போராடும் சுந்தரி, சொந்தங்களால் புறக்கணிக்கப்படும் கண்ணம்மா என்று மாறி மாறி எங்கள் வாழ்க்கையில் விளையாடுகிறார்கள் என்று நெட்டிசன் கமெண்ட் ஒன்றை பதிவு செய்துள்ளார். டிஆர்பி-யில் டாப்பில் இருக்கும் இந்த இரண்டு சீரியல்களையும் கண்டிப்பாக நிறுத்த வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இரவு நேரத்தில் ஆண்களுக்கு சோறு வைப்பதை மறந்துவிட்டு, மனைவிமார்கள் ஆர்வமாக சீரியல் பார்த்துக் கொண்டிருக்கின்றனர் என்று அவர் கமெண்ட் மூலம் தனது வருத்தத்தை அந்த நபர் தெரிவித்திருக்கிறார். சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் அந்த நெட்டிசனின் பதிவுக்கு, ஏராளமான லைக்குகளும், ஹார்ட் இமோஜிகளும் குவிந்த வண்ணம் உள்ளது.