நடிகை கங்கனா ரணாவத்துக்கு பத்மஸ்ரீ விருது கொடுத்துள்ள மத்திய அரசு தென்னிந்திய நடிகைகளை அங்கீகரிக்க தவறி விட்டதாக மூத்த நடிகை ஜெயசுதா ஆதங்கத்துடன் கூறியுள்ளார்.

மூத்த நடிகை

தமிழில் 1970 மற்றும் 1980-களில் அதிக படங்களில் நடித்து பிரபல நடிகையாக இருந்தவர் ஜெயசுதா. தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த இவர், மலையாளம், இந்தி, கன்னட மொழிப் படங்களிலும் நடித்து இருக்கிறார். நடிப்பது மட்டுமின்றி காங்கிரஸ் மற்றும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆகிய கட்சிகளில் இணைந்து பணியாற்றியுள்ளார். இந்நிலையில் OTT ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்ட இவர் “தென்னிந்திய நடிகர்கள் அரசால் அங்கிகரிக்கப்படுவதில்லை எனக் கூறி இருக்கிறார்.

அங்கீகரிக்கவில்லை

இதுகுறித்து ஜெயசுதா அளித்துள்ள பேட்டியில்; ”கங்கனா ரணாவத்துக்கு பத்மஸ்ரீ விருது கொடுத்துள்ளனர். எனக்கு அது பரவாயில்லை. அவர் ஒரு அற்புதமான நடிகை. ஆனாலும் கங்கனா ரணாவத் 10 படங்களுக்குள் மட்டுமே நடித்து இந்த விருதை பெற்று இருக்கிறார். ஆனால் என்னை போன்ற பலர், ஏராளமான படங்களில் நடித்து இருக்கிறோம். ஆனால் நாங்கள் அரசால் அங்கீகரிக்கப்படாமலேயே இருக்கிறோம். கின்னஸ் சாதனையில் இடம் பிடித்திருக்கும் பெண் இயக்குநர் விஜய நிர்மலாவுக்கு கூட இதுபோன்ற பாராட்டுகள் கிடைக்கவில்லை. தென்னிந்திய நடிகைகளை அரசு அங்கீகரித்து பாராட்டவில்லை என்பதை வருத்தமாக உணர்கிறேன்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here