மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் வெளியான ‘கலகத்தலைவன்’ திரைப்படம் டிச.,16-ம் தேதி OTT தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

‘கலகத்தலைவன்’

தடம், மீகாமன் போன்ற திரைப்படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘கலகத்தலைவன்’. உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். மேலும், பிக் பாஸ் ஆரவ், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

OTT ரிலீஸ்

ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் ‘கலகத்தலைவன்’ திரைப்படம் OTT தளத்தில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Netflix OTT தளத்தில் ‘கலகத்தலைவன்’ திரைப்படம் நாளை (டிச.,16) வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here