திருப்பதியில் குவிந்து வரும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுமார் 30 மணி நேரம் காத்திருந்து ஏழுமலையானை தரிசித்து வருகின்றனர்.

பிரம்மோற்சவம் நிறைவு

திருப்பதி திருமலையில் கடந்த சில நாட்களாக வருடாந்திர பிரம்மோற்சவ விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த விழா நேற்று முன்தினம் காலை தீர்த்தவாரியுடன் நிறைவு பெற்றது. பிரம்மோற்சவ நாட்களில் ரத்து செய்யப்பட்டிருந்த அனைத்து தரிசனங்களும் நேற்று முதல் மீண்டும் துவங்கின.

அலைமோதும் கூட்டம்

இதையடுத்து திருமலையில் நேற்று காலை முதல் பக்தர்கள் கூட்டம் அலைமோதத் துவங்கியுள்ளது. இலவச தரிசனத்தில் பக்தர்கள் 30 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருமலையில் உள்ள 32 காத்திருப்பு அறைகளை கடந்து சுமார் 10 கி.மீ. தொலைவு வரை பக்தர்கள் தரிசன வரிசை நீண்டது. நேற்று முன்தினம் 63 ஆயிரத்து 579 பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்தினர். பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளதால் ஏழுமலையானுக்கு இரவு 11:30 மணிக்கு ஏகாந்த சேவை நடத்தி, நள்ளிரவு 12:00 மணிக்கு கோவில் நடை சாத்தப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here