ஆர்.ஜே.வாக தனது கெரியரை துவங்கியவர் விக்னேஷ்காந்த். சென்னை 28, நட்பே துணை, மீசையை முறுக்கு உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். விக்னேஷ்காந்துக்கு கடந்த மே மாதம் நிச்சயதார்த்தம் நடந்ததையடுத்து, தற்போது திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. விக்னேஷ்காந்தின் திருமணத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியிருக்கிறார்.