பிரபல நடிகை நித்யாமேனன் மலையாள நடிகர் ஒருவரை திருமணம் செய்து கொள்ளப்போவதாக கடந்த சில நாட்களாக செய்திகள் பரவியது. இதனை அறிந்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த நிலையில், தனது திருமணம் தொடர்பான செய்தி முற்றிலும் வதந்தி என நடிகை நித்யாமேனன் கூறியிருக்கிறார். இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது; ‘தயவு செய்து உண்மை தகவலை மட்டும் பகிருங்கள், சமூக வலைதளத்தில் வதந்திகள் பரவுகின்றது. இப்போதைக்கு திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் இல்லை. என் முழு கவனமும் அடுத்தடுத்த படங்களில் மட்டுமே இருக்கிறது’. இவ்வாறு நடிகை நித்யாமேனன் தெரிவித்திருக்கிறார்.