சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தங்கத்தில் முதலீடு
கடந்த ஆண்டு மே மாதத்தில் தங்கம் விலை ரூ.43 ஆயிரத்தை எட்டி வரலாறு காணாத விலை உயர்வை அடைந்தது. இந்த விலை உயர்வு நடுத்தர மக்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேசமயம் தொழில்துறையில் நிலவிய தேக்கம், தங்கத்தின் மீதான முதலீடு போன்றவை விலை அதிகரிப்பிற்கு காரணமாக அமைந்தது. இதைத் தொடர்ந்து, முதலீடுகள் குறைந்ததால் தங்கம் விலை கணிசமாக குறைந்து வருகிறது.
அதிரடி உயர்வு
கடந்த சில தினங்களாக தங்கம் விலை தொடர்ந்து ஏற்றத்தாழ்வுகளை சந்தித்து வருகிறது. கடந்த வாரங்களில் சவரன் ரூ.34 ஆயிரத்துக்கு கீழ் வந்த நிலையில், இன்று மீண்டும் விலை உயர்ந்துள்ளது. நேற்று ரூ.560 குறைந்து சவரன் ரூ.33 ஆயிரத்து 440-க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.33 ஆயிரத்து 840-க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.50 அதிகரித்து ரூ.4 ஆயிரத்து 230 ஆக உள்ளது. வெள்ளியின் விலை கிராமுக்கு 70 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.71.40க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.71,400-க்கும் விற்பனையாகிறது.