கொரோனா வைரஸ் காரணமாக இந்த ஆண்டு பண்டிகைகளை கொண்டாட முடியாதது மிகவும் வருத்தமளிப்பதாக நடிகை பூஜா ஹெக்டே தெரிவித்துள்ளார்.
இளம் நடிகை
‘முகமூடி’ திரைப்படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. பின்னர் தெலுங்கு, இந்திப் படங்களில் நடித்தார். தெலுங்கில் அல்லு அர்ஜூனுடன் இவர் நடித்த ‘அல வைக்குந்தாபுராமுலு’ படத்தில் இடம்பெற்ற “புட்ட பொம்மா” என்ற பாடல், மொழி தெரியாத மக்களும் விரும்பி கேட்கும் பாடலாக அமைந்தது. அதன்பின் பல படங்களில் நடித்து வருகிறார்.
கொண்டாட முடியவில்லை
கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே இருந்த பூஜா ஹெக்டே, அந்த அனுபவங்கள் கூறியுள்ளார். இதுபற்றி அவர் பேசுகையில், சினிமாக்காரர்கள் என்றாலே படப்பிடிப்பில் பிஸியாக இருப்போம். ஆனால் இப்போது எல்லோருமே வீட்டில்தான் இருக்கிறோம். நான் மும்பையில் பிறந்து வளர்ந்தாலும், தென்னிந்தியாவில் நடக்கும் எல்லா பண்டிகைகளையும் ஆர்ப்பாட்டமாக கொண்டாடுவோம். பொங்கல் பண்டிகை என்றாலே எனது அம்மா செய்யும் லட்டுதான் நினைவுக்கு வரும். தசரா என்றால் எங்கள் வீட்டில் கொலு இருக்கும். பஜனை நடத்துவோம். இப்போது கொரோனாவால் நண்பர்கள், உறவினர்களுடன் சேர்ந்து பண்டிகைகளை உற்சாகமாக கொண்டாட முடியவில்லை. விநாயகர் சதுர்த்தியை விமரிசையாக கொண்டாட முடியாமல் போனது. கொரோனா முடியும் முன்பு எல்லா பண்டிகைகளும் வீணாக போய்விடும் என்ற வருத்தம் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.