ஓணம் பண்டிகையை கொண்டாடுவதற்காக நடிகை நயன்தாரா காதலன் விக்னேஷ் சிவனுடன் தனி விமானத்தில் கொச்சின் சென்றுள்ளார்.

காதல் கிசுகிசு

தமிழில் முன்னணி நடிகையான நயன்தாரா சிம்பு, பிரபுதேவா ஆகிய இருவருடனும் சேர்த்து வைத்து கிசுகிசுக்கப்பட்டார். பிரபுதேவா மீதிருந்த அளவு கடந்த அன்பினால் அவருடைய பெயரை தன்னுடைய கையில் பச்சை குத்தி கொண்டார் நயன்தாரா. மேலும், மதம் மாறி பிரபுதேவாவை திருமணம் செய்து கொண்டதாகவும் சில தகவல்கள் வெளியாகின. பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தது நாம் அனைவருமே அறிந்ததுதான். தற்போது, இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் கடந்த 5 வருடத்திற்கும் மேலாக நயன்தாரா ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறார். நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணத்தை கோலிவுட் வட்டாரம் பெரிதும் எதிர்பார்த்த நிலையில் உள்ளது. ரசிகர்கள் அவ்வப்போது, இவர்கள் திருமணம் குறித்த உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் ஏதேனும் கிடைத்தால்கூட அதை சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்து பெரிதாக்கிவிடுவார்கள். அந்த செய்திகளுக்கு இருவர் தரப்பிலிருந்தும் மறுப்பு வருவது வழக்கமான ஒன்றாகிவிட்டது. நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் ஊரடங்கில் முழுமையான தளர்வு ஏற்பட்டதும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகின.

சொந்த ஊரில் கொண்டாட்டம்

இந்த நிலையில், மலையாள மொழி பேசும் மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஓணம் பண்டிகை இன்று வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஓணம் பண்டிகையை கொண்டாடுவதற்காக நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகியோர் தனி விமானம் மூலம் கேரள மாநிலம் கொச்சினுக்கு சென்றுள்ளனர். கொச்சியில் உள்ள நயன்தாராவின் வீட்டில் இருவரும் ஓணம் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். பல மாதங்கள் கழித்து விமானத்தில் பயணம் செய்தது மகிழ்ச்சி அளித்ததாக விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here