நடிகை வனிதா விஜயகுமார் பிரதமர் நரேந்திர மோடிக்கும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யூடியூப் சேனல்
கொரோனா ஊரடங்கு சமயத்தில் நடிகை வனிதா விஜயகுமார் யூடியூப் சேனல் ஒன்றை துவங்கி நடத்தி வருகிறார். அதில், விதவிதமான சமையல் வீடியோக்களையும், புகைப்படங்களையும் வெளியிடுவதுடன் பல டிப்ஸ்களையும் பதிவிட்டு வருகிறார். வனிதாவின் மூன்றாவது திருமணம் எதிராக பல பேர் பேசி வரும் பலர், பெரும்பாலும் அவர் வெளியிடும் ஒவ்வொரு வீடியோக்களுக்கும் தங்களது கமெண்டுகளை பதிவிட்டு கொண்டு தான் இருக்கின்றனர். தற்போது அதில் தான் பிரச்சனை ஆரம்பித்துள்ளது.
வனிதா கோரிக்கை
வனிதா விஜயகுமாரின் பெயரில் யாரோ ஒருவர் போலியாக யூடியூப் சேனலை துவங்கி இருப்பதாகவும், இவரது வீடியோக்கள் அனைத்தையும் அந்த நபர் அதில் பதிவிட்டு கொண்டிருப்பதாகவும் ரசிகர் ஒருவர் டுவிட்டர் மூலம் வனிதாவிற்கு தகவல் தெரிவித்தார். அந்த ரசிகரின் டுவீட்டை பார்த்த வனிதா, அவருக்கு பதிலளித்துள்ளார். இதுதொடர்பாக வனிதா கூறியிருப்பதாவது; போலி சேனல்களை யூடியூப் இந்தியா நிர்வாகம் கவனிக்க வேண்டும். யார் வேண்டுமானாலும் யூடியூப் சேனல் துவங்கலாம் என்று இப்பொழுது ஆகிவிட்டது. அவர்களைப் பற்றிய பின்னணியில் எதுவுமே விசாரிக்கப் படுவதில்லை. ஆதார் மற்றும் கே.ஒய்.சி. ஆகியவற்றை கேட்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ள நடிகை வனிதா, அந்த டுவீட்டை பிரதமர் நரேந்திர மோடிக்கும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் டேக் செய்துள்ளார்.