சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.352 உயர்ந்து ரூ.40,672க்கு விற்பனை செய்யப்படுகிறது.
உயரும் விலை
பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வதால் அதன் தேவை அதிகரித்து, விலையும் உயர்ந்து கொண்டே போகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பால் தொழில்துறை தேக்கம் குறித்த பீதி நிலவி வரும் நிலையில், தங்கம் விலையில் தற்போது ஏற்ற இறக்கங்கள் நிலவி வருகின்றன. கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை குறைந்து வந்த நிலையில், மீண்டும் விலை சற்று அதிகரித்துள்ளது. அதன்படி இன்று காலை நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.352 உயர்ந்து ரூ.40,672க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.44 உயர்ந்து ரூ.5,084க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலையில் மாற்றம்
வெள்ளி கிராமுக்கு ரூ.1.760 காசுகள் உயர்ந்து ரூ.74.30க்கும், கட்டி வெள்ளி கிலோ ரூ.74,300க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஜூலை மாதம் 22 ஆம் தேதி ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.38 ஆயிரமாக இருந்த நிலையில், கடந்த 7 ஆம் தேதி ரூ.43 ஆயிரத்தை தாண்டி, வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தைத் தொட்டது குறிப்பிடத்தக்கது.