செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், அங்கு சென்று மது வாங்க முடியாமல் சென்னையைச் சேர்ந்த குடிமகன்கள் தவித்து வருகின்றனர்.

டாஸ்மாக் திறப்பு

சென்னை மற்றும் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர பிற இடங்களில் மே 7-ந் தேதி மதுக்கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி சென்னையை தவிர தமிழகம் முழுவதும் பல இடங்களில் டாஸ்மாக் மதுக்கடைகள் இன்று காலை 10 மணிக்கு திறக்கப்பட்டன.

மதுப்பிரியர்கள் குஷி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 16 டாஸ்மாக் கடைகளும், திருவள்ளூர் மாவட்டத்தில் 40 டாஸ்மாக் கடைகளும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 41 டாஸ்மாக் கடைகளும் திறக்கப்பட்டுள்ளன. இந்த மூன்று மாவட்டங்களிலும் மது வாங்கக்கூடியவர்கள் வாக்காளர் அடையாள அட்டை அல்லது ஆதார் கார்டு அல்லது ஸ்மார்ட் கார்டு உள்ளிட்ட ஏதேனும் ஒரு அடையாள அட்டையை காண்பித்து மது வாங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருக்கும் குடிமகன்கள், அரசு கூறும் அத்தனை நிபந்தனைகளையும் ஒழுங்காக கடைபிடித்து மதுவை வாங்கிச் செல்கின்றனர்.

தவிக்கும் குடிமகன்கள்

சென்னை மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாததால், சென்னையை ஒட்டியுள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டப் பகுதிகளைச் சேர்ந்த குடிமகன்கள் பெரும் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர். சென்னை குடிமகன்கள் எல்லை தாண்டி வந்து மதுவாங்க முடியாத அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதையுமீறி யாரேனும் சென்னையில் இருந்து அண்டை மாவட்டங்களில் மதுவாங்க வந்தால் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறை தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை குடிமகன்கள் யாரும் மதுவாங்குவதற்கு செல்ல முடியாமல் உள்ளார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here