பாலிவுட்டில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் ஒரு நடிகனாக வேலும் உயருவேன் என தென் கொடிய நடிகர் பார்க் சியோ ஜூன் விருப்பம் தெரிவித்திருக்கிறார்.

பிரபல நடிகர்

பிரபல தென் கொரிய நடிகர் பார்க் சியோ ஜூன். இவர் கில் மீ, ஹீல் மீ, ஷீ வாஸ் பிரிட்டி, ஹ்வாரங்: தி பொயட் வாரியர் யூத், இடாவோன் கிளாஸ் உள்ளிட்ட பல தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடித்த கியோங்சியோங் கிரியேச்சரின் இரண்டாவது சீசன் வெளியானது. இதில், ஹான் சோ-ஹீ, கிளாடியா கிம், வை ஹா-ஜூன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

விருப்பம்

இந்நிலையில், சமீபத்தில் பேசிய நடிகர் பார்க் சியோ-ஜூன் இன்னும் நீண்ட தூரம் செல்ல விரும்புவதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்; “நான் பாலிவுட்டை மிகவும் விரும்புகிறேன். என்னை அங்கு அழைத்து வாய்ப்பு கொடுங்கள். அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தால் நான் மேலும் உயரம் செல்வேன். ஒரு நடிகனாக நான் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியிருக்கிறது. நான் தொடர்ந்து முன்னேறி வரும் நடிகராக இருக்க விரும்புகிறேன்” எனத் தெரிவித்திருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here