தமிழ் சினிமாவில் வடிவேலுவுடன் பல படங்களில் நடித்து மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகர் வெங்கல் ராவ். சமீப காலமாக இவருக்கு பட வாய்ப்புகள் இல்லாத நிலையில், நிதி ரீதியாக மிகவும் வறுமையில் இருப்பதாக தெரிகிறது. அதுமட்டுமின்றி உடல்நல குறைவாலும் குறைவாலும் அவர் பாதிக்கப்பட்டுள்ளார். தற்போது நடிகர் வெங்கல்ராவ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது; “எனக்கு ஒரு கை, ஒரு கால் செயலிழந்து விட்டது. என்னால் நடக்கவே முடியவில்லை. சரியாக என்னால் வாயை வைத்து கூட பேசமுடியவில்லை. எனக்கு சினிமா தொழிலார்கள், சினிமா நடிகர்கள் எல்லாம் உங்களால் முடிந்த உதவிகளை எனக்கு செய்யுங்கள். மாத்திரை வாங்குவதற்கு கூட பணம் இல்லை, மருத்துவமனைக்கு செல்ல கூட என்னிடம் பணமில்லை. ரொம்பவே கஷ்டபடுகிறேன். எனவே எனக்கு உதவி செய்யுங்கள்” என்று உருக்கமாக பேசியுள்ளார்.















































