நடிகர் சிம்பு திருமணம் செய்த பிறகு தான் நான் திருமணம் செய்வேன் என பிரபல சீரியல் நடிகை ரேமா அசோக் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சூப்பர் ஹீரோ

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சிம்பு. இவர் நடிப்பு மட்டுமின்றி இயக்குநர், பாடகர், நடனம் எனப் பன்முகத் தன்மை கொண்டவர். தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல்வேறு படங்களில் அவர் நடித்துள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் சிம்பு, தற்போது மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் ‘தக் லைப்’ படத்தில் நடிக்கிறார். 

தடாலடி

இந்நிலையில், பிரபல சீரியல் நடிகையும், சிம்புவின் தீவிர ரசிகையுமான ரேமா அசோக், சிம்புவின் திருமணத்திற்கு பிறகு தான் தனக்குத் திருமணம் என்று தடாலடியாக கூறியுள்ளதாக கூறப்படுகிறது. 41 வயதாகும் நடிகர் சிம்புவுக்கு எப்போது திருமணம் என்று பலரும் கேட்டு வரும் நிலையில் ரேமா அசோக் இவ்வாறு கூறியிருப்பது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here