கன்னடத்தில் வெளியாகி உள்ள ‘ரங்கநாயகா’ என்னும் திரைப்படத்தில் 60 வயதுள்ள நடிகருக்கு ஜோடியாக நடித்துள்ளார் நடிகை ரட்சிதா.

திறமையானவர்

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ சீரியலில் நடித்து பிரபலமானவர் நடிகை ரட்சிதா மகாலட்சுமி. ‘சரவணன் மீனாட்சி’ சீரியலில் எத்தனையோ சரவணன் கதாபாத்திரம் மாறினாலும், இறுதிவரை ரட்சிதா மட்டுமே மீனாட்சி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இந்த சீரியலில் கிடைத்த புகழால் அவருக்கு படத்தில் நடிக்கும் வாய்ப்பும் அமைந்தது. தமிழில் ‘உப்பு கருவாடு’, கன்னடத்தில் ‘பாரிஜாதா’ ஆகிய படங்களில் ரிட்சிதா கதாநாயகியாக நடித்துள்ளார்.

சின்னத்திரையில் சாதனை

பெங்களூரில் பிறந்து வளர்ந்த ரட்சிதா, கன்னட சேனலில் ஒளிபரப்பான ’மேக மந்தரன்’ என்ற சீரியல் மூலம் சின்னத்திரைக்குள் நுழைந்தார். அதனைதொடர்ந்து 5 கன்னட சீரியல்கள், 2 தெலுங்கு சீரியல்களில் நடித்துவிட்டு, 2011ல் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிரிவோம் சந்திப்போம்’ என்ற சீரியல் மூலம் தமிழில் அறிமுகமானார். அந்த சீரியலில் தன்னுடன் ஜோடியாக நடித்த ஸ்ரீவில்லிப்புத்தூரை சேர்ந்த தினேஷ் என்பவரை ரட்சிதா காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். சிறிது காலங்களில் தினேஷுக்கும் ரட்சிதாவுக்கும் இடையே ஏற்பட்ட சில கருத்துவேறுபாடுகள் காரணமாக கடந்த 2021ஆம் ஆண்டு பிரிந்தனர்.

அடுத்தடுத்து படம் 

இந்நிலையில், ‘ரங்கநாயகா’ என்னும் கன்னட திரைப்படத்தில் ஜக்கேஷ் என்ற 60 வயது ஹீரோவுக்கு ஜோடியாக நடித்துள்ளார் ரட்சிதா. இப்படம் நேற்று வெளியானது. இதையடுத்து மற்றொரு கன்னட படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் நடிகை ரட்சிதா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here