அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டிருந்த ஏ.வி. ராஜு சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில், நடிகை திரிஷா குறித்து அவர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு திரைத்துறையினர் உட்பட பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். நடிகை திரிஷாவும் கண்டனம் தெரிவித்ததுடன், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் கூறினார். இதையடுத்து, தான் அப்படி பேசவே இல்லை என்றும் தனது பேச்சை திரித்து போட்டுவிட்டதாகவும் கூறி ஏ.வி. ராஜூ மன்னிப்பு கேட்டார். இந்நிலையில் ஏ.வி. ராஜு பெயரை குறிப்பிடாமல் டுவீட் செய்துள்ளார் நடிகர் விஷால். அதி அவர் கூறியிருப்பதாவது; “நாங்கள் நல்ல நண்பர்கள் மட்டும் அல்ல திரையுலகில் சக கலைஞர்களும் கூட. நீங்கள் செய்ததை பார்த்த பிறகு உங்கள் வீட்டில் உள்ள பெண்கள் உங்களை வரவேற்பார்கள் என நான் விரும்புகிறேன், நம்புகிறேன். நீங்கள் செயத்தது ரொம்ப கேவலமானது, சொல்வதற்கு லாயக்கு இல்லாதது. உங்களுக்கு கண்டனம் தெரிவிக்க விரும்பவில்லை. அது போதாது. நீங்கள் நரகத்தில் கஷ்டப்படுவீர்கள் என நம்புகிறேன். இதை நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளராக சொல்லவில்லை ஒரு மனிதனாக சொல்கிறேன்” எனக் கூறிப்பிட்டுள்ளார்.