வித்தியாசமான முறையில் வொர்க் அவுட் செய்யும் நடிகை ஹன்சிகாவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
முன்னணி நடிகை
தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. குட்டி குஷ்பு என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர். ஆனால் ஒரு கட்டத்தில் அவருக்கான படவாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. சமீபகாலமாக உடல் எடையை கணிசமாக குறைத்து மெல்லிய தோற்றத்திற்கு மாறி ரசிகர்களை அவர் அதிர்ச்சி அடையச் செய்தார். இந்நிலையில் நடிகை ஹன்சிகா சோகைல் கதுரியா என்ற தொழிலதிபரை ஹன்சிகா திருமணம் செய்துகொண்டார்.
வொர்க் அவுட்
இந்த நிலையில், நடிகை ஹன்சிகாவின் நடிப்பில் சில படங்கள் ரிலீஸ் ஆக உள்ளன. திருமணத்துக்குப் பின்னரும் சினிமாவில் கவனம் செலுத்தி வரும் ஹன்சிகா, காந்தாரி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடித்த MY3 வெப் தொடர் ரிலீஸாகி ப்ளாப் ஆனது. இந்நிலையில் இப்போது கிளாமர் உடையில் அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.