சங்கி என்பது கெட்டவார்த்தை என்று பொருள்பட ஐஸ்வர்யா பேசவில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் விளக்கம் கொடுத்துள்ளார்.

லால் சலாம்  

லைகா நிறுவனம் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் லால் சலாம் படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்ட இளம் நடிகர்களுடன் இணைந்து லால் சலாம் படத்தில் மொய்தீன் பாய் என்ற இஸ்லாமியர் வேடத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்ததை அடுத்து பிப்ரவரி 9 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

வருத்தமா இருக்கு

இந்நிலையில் சமீபத்தில் லால் சலாம் படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அப்போது அப்படத்தின் இயக்குநரும், ரஜினியின் மூத்த மகளுமான ஐஸ்வர்யா ரஜினி பேசுகையில்; “என் அப்பாவை சங்கி என விமர்சிக்கிறார்கள். அதைக் கேட்கும் போது எனக்கு வருத்தமாக இருக்கிறது. அவர் ஒரு சங்கியாக இருந்திருந்தால் லால் சலாம் படத்தில் நடித்திருக்க மாட்டார். நீங்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், இந்த படம் உங்களைப் பெருமைப்படுத்தும். ரஜினிகாந்த் கண்டிப்பாக சங்கி இல்லை” எனக் கூறினார்.

விளக்கம்

இந்நிலையில், இன்று சென்னை விமான நிலையத்திற்கு வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், “சங்கி என்பது கெட்டவார்த்தை என்று பொருள்பட  ஐஸ்வர்யா பேசவில்லை; ஆன்மீகவாதியான தனது தந்தையை சங்கி என குறிப்பிடக்கூடாது என ஐஸ்வர்யா பேசினார்” என்று விளக்கமளித்தார்.
 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here