தெலுங்கில் மூத்த நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்க நடிகை திரிஷா ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கனவுக்கன்னி
ஜோடி திரைப்படத்தில் சிம்ரனுக்கு தோழியாக ஒரு சில காட்சிகளில் தலைகாட்டி, அதன்பிறகு “லேசா லேசா” படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை திரிஷா. ஆனால் அந்த படம் வெளிவதற்கு முன் “மௌனம் பேசியதே” படத்தில் கமிட்டாகி அந்த படம் முதலில் வெளியானது. இதனால் மௌனம் பேசியதே படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார். அதன்பிறகு இவரது நடிப்பில் வெளியான அலை, எனக்கு 20 உனக்கு 18, கில்லி, ஆயுத எழுத்து, திருப்பாச்சி ஆகிய படங்கள் அடுத்தடுத்து சூப்பர்ஹிட் படங்களாக அமைந்ததால், ரசிகர்கள் மனதில் கனவுக்கன்னியாக வலம் வந்தார் திரிஷா.
திருப்புமுனை
விஜய், அஜித், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து சினிமா துறையில் முன்னணி நடிகையாக நிலைத்து நிற்கிறார் திரிஷா. பொன்னியின் செல்வன் திரைப்படம் திரிஷாவின் சினிமா கெரியருக்கு முக்கியமான படமாக அமைந்திருந்தது. சமீபத்தில் வெளியான லியோ படத்திலும் திரிஷாவின் நடிப்பு பேசப்பட்டது. இதனைத்டொடர்ந்து அஜித்தின் விடாமுயற்சி, மலையாளத்தில் மோகன்லாலுடன் ராம் ஆகிய படங்களில் திரிஷா நடித்து வருகிறார். மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் தக் லைப் படத்திலும் திரிஷா நடிக்க இருக்கிறார். 
ஒப்பந்தம்
தமிழ் மட்டும் அல்லாது தெலுங்கு மொழிப் படங்களிலும் நடிக்க திரிஷாவிற்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது. சிரஞ்சீவி நடிக்கும் ‘விஷ்வம்பரா’ படத்திலும், நாகார்ஜூனாவின் 100வது படமான “லவ் ஆக்ஷன் ரொமான்ஸ்” படத்திலும் கதாநாயகியாக நடிக்க நடிகை திரிஷா ஒப்பந்தம் ஆகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.















































