சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக 27 விமானங்கள் தாமதமாகியுள்ளன.
தொடர் மழை
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சென்னை புறநகர் பகுதிகளில் இன்று காலை முதலே தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. விமான நிலையம், மீனம்பாக்கம், பல்லாவரம், தாம்பரம், குன்றத்தூர், பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரை தொடர் கனமழை பெய்தது.
தாமதம்
இந்த தொடர் கனமழையின் காரணமாக சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 22 விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன. அதேபோல் சென்னை வரவேண்டிய 5 விமானங்களும் தாமதமாக வந்து சேர்ந்தன. சிங்கப்பூர், கோலாலம்பூர், கொழும்பு, தோகா ஆகிய இடங்களுக்கு செல்லும் சர்வதேச விமானங்களும் தாமதமாக இயக்கப்பட்டது. மழையின் காரணமாக பயணிகள் மற்றும் விமான ஊழியர்களின் வருகை தாமதமானதால் விமானங்கள் இயக்கமும் தாமதமாகியுள்ளது.