80களின் காலக்கட்டத்தில் பிரபலமான நடிகையாக திகழ்ந்த நடிகை ராதாவின் மகள் கார்த்திகா, ‘கோ’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதனைதொடர்ந்து அன்னக்கொடி, புறம்போக்கு என்கிற பொதுவுடமை உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்து இருக்கிறார். இந்த நிலையில் கார்த்திகாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. வருங்கால கணவருக்கு கார்த்திகா மோதிரம் மாற்றும் நிச்சயதார்த்த புகைப்படத்தை நடிகை ராதா வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் வெளியிட்டுள்ள நெகிழ்ச்சியான பதிவில், “புதிய குடும்பத்துக்கு விரைவில் எங்கள் பெண்ணை கொடுப்பதற்காக நான் பெருமைப்படாமல் இருக்க முடியாது. வெற்றிகரமான திருமண வாழ்க்கைக்கு கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும். என் இதயத்தில் கலவையான உணர்வுகள் உள்ளன. இந்த சிறந்த அனுபவத்துக்கு நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.