தமிழகத்தில் இன்று முதல் வருகிற 31 ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கீழடுக்கு சுழற்சி
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது; “வடக்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல் தென்மேற்கு வங்கக்கடலை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (அக்.,25) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இடி மின்னலுடன் மழை
26.10.2023 முதல் 28.10.2023 வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 29.10.2023 தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 30.10.2023 மற்றும் 31.10.2023 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மேகமூட்டம்
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 – 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
பரவலாக மழை
கடந்த 24 மணி நேரத்தில் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் 5 செ.மீ., பட்டுக்கோட்டை, சோத்துப்பாறை, வால்பாறை PTO தலா 3 செ.மீ., வேதாரண்யம், மானாமதுரை, ராமநாதபுரம், தொண்டி, ஸ்ரீவில்லிபுத்தூர், கூடலூர், தேக்கடி, சிவகிரி (தென்காசி), மணியாச்சி தலா 2 செ.மீ., திருவாடானை, உத்தமபாளையம், குப்பணம்பட்டி, ஆர்.எஸ்.மங்கலம், ஆயின்குடி, கடல்குடி, சோலையார் தலா 1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது”. இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.