புதுக்கோட்டையில் ‘லியோ’ படத்தின் முதல் காட்சியின் போது தம்பதி ஒன்று மோதிரம் மாற்றிக்கொண்டு திரையரங்கிலேயே திருமண நிச்சயம் செய்துகொண்ட வீடியோ வைரலாகி வருகிறது.

மேள தாளத்துடம் ஆட்டம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘லியோ’. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இப்படம் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. தமிழகத்தில் காலை 7 மணி காட்சிக்கு அனுமதி வழங்காததால் காலை 9 மணிக்கு படம் வெளியானது. அதிகாலையில் இருந்தே திரையரங்குகள் முன் திரண்டிருந்த விஜய் ரசிகர்கள் மேளம், தாளத்துடன் ஆடிப்பாடி கொண்டாடினர். நடிகர் விஜய்யின் கட் அவுட்டிற்கு பாலாபிஷேகம் செய்தும், தேங்காய்களை உடைத்தும் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

கொண்டாட்டம்

தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடக மாநிலங்களிலும் லியோ திரைப்படம் ரிலீஸானது. அந்த மாநிலங்களிலும் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.

நிச்சயதார்த்தம்

புதுக்கோட்டையில் லியோ படம் பார்க்க வந்த ஒரு ஜோடி, திரையரங்கில் வைத்து மோதிரம் மாற்றிக் கொண்டு திருமண நிச்சயம் செய்து கொண்டது. திருமண நிச்சயம் செய்து கொண்ட அவர்களுக்கு விஜய் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். பின்னர் ரசிகர்களுடன் இணைந்து அந்த ஜோடி படம் பார்த்து மகிழ்ந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here