பிரபல நடிகை சோனா தனது வாழ்க்கையை ‘ஸ்மோக்’ என்ற பெயரில் வெப் தொடராக எடுத்துள்ளார். இதில் அவரே நடித்து இயக்கியும் இருக்கிறார். இதுகுறித்த செய்தியாளர்கள் சந்திப்பின் போது நடிகை சோனா பேசுகையில்; “எனது 23 ஆண்டுகால சினிமா பயணத்தில் நிறைய ஏற்ற, இறக்கம், சந்தோஷம், சோகங்களை சந்தித்து இருக்கிறேன். ஆனாலும் ஒவ்வொரு கட்டத்திலும் என்னை நானே உறுதியாக்கி நகர்ந்தேன். என்னை கவர்ச்சி நடிகை என்றுதான் அழைக்கிறார்கள். அதற்கு காரணம் நான்தான். அது தவறு என்று சொல்லவில்லை. ஒரு கட்டத்துக்கு மேல் அந்த பெயர் எனக்கு பிடிக்கவில்லை. ஏனெனில் இந்த அடையாளத்தால்தான் எனக்கு திருமணம் நடக்கவில்லை. நான் கவர்ச்சி நடிகை என்பது திரையில் மட்டும்தான். மற்றபடி நானும் ஒரு பெண்தான்”. இவ்வாறு நடிகை சோனா கூறியுள்ளார்.















































