எஸ்.ஜே.சூர்யா, விஷால் நடிப்பில் வெளியான ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் உலகளவில் ரூ.100 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது.

பெரும் வரவேற்பு
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’. செப்., 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இத்திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. டைம் ட்ராவலை மையப்படுத்திய கேங்ஸ்டர் காமெடி படமாக ‘மார்க் ஆண்டனி’ உருவாகியது. 
வசூல் சாதனை
‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் இதுவரை ரூ.90 கோடி வசூலித்ததாக கூறப்பட்டது. இந்நிலையில், இப்படம் உலகளவில் ரூ. 100 கோடி வசூலித்துவிட்டதாக சினிமா தளம் ஒன்று குறிப்பிட்டது. இதனை ‘மார்க் ஆண்டனி’ படத்தின் தயாரிப்பாளர் வினோத், தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்தள்ளார்















































