கடலூர் அருகே செல்போன்களை திருடிவிட்டு அதன் உரிமையாளரிடம் பணம் கேட்டு பேரம் பேசிய திருடனின் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செல்போன் திருட்டு

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள திராசு கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழைப்பெருமாள். விவசாயான இவர் தனது வீட்டில் செல்போனை சார்ஜ் போட்டு உள்ளார். அதனை மர்ம நபர் ஒருவர் திருடி சென்ற நிலையில், திருடு போன செல்போனில் இருந்து ஏழைப் பெருமாள் மனைவியின் செல்போனுக்கு அழைப்பு வந்துள்ளது.

”நான் திருடன் பேசுறேன்”

அதில் மர்ம நபர் பேசியதாவது; “நான் தான் திருடன் பேசுறேன்.. உங்க 4 போனை நான் தான் எடுத்து சென்றேன். நான் திருட்டு பயன் தான். பணம் கிடைத்தால் பணம் எடுப்பேன், செல்போன் கிடைத்தால் செல்போன் எடுப்பேன், எனவே எனக்கு பணம் தேவை. 4 போன் இருக்கு ரூ.15 ஆயிரம் கொடுங்கள், செல்போனை கொடுத்து விடுகிறேன். இதற்கு எதிர் முனையில் உள்ளவர், “என்னால் அவ்வளவு கொடுக்க முடியாது ரூ.2 ஆயிரம் ரூ.3 ஆயிரம் தான் முடியும் என கூறுகிறார். இதனையடுத்து திருடன், கடையில் போனால் முழுவிலையும் கொடுத்து போன் வாங்க வேண்டும். எனவே ரூ.15 ஆயிரம் கொடுங்கள், அப்படியே வரும் பொழுது ஓட்டலில் சாப்பாடு வாங்கி வாருங்கள் என தெரிவித்துள்ளார்.

என்னைய விட மோசமானவங்க

தொடர்ந்து பேசிய திருடன், உங்களுக்கு செல்போன் வேண்டும் என்றால் பணம் கொடுங்க.. போலீசுக்கு போகாதீங்க, போலீசுக்கு போனாலும் எந்தவித பயனும் இல்லை, போலீஸ் என்னைய விட மோசமானவங்க, என்னிடம் எதாவது வாங்கிட்டு விட்டுருவாங்க, மேலும் உங்கள் ஊர் அருகில் உள்ள இடத்திலும் செல்போனை திருடிவிட்டு வந்துட்டேன், அவர்களையும் என்னை தொடர்பு செய்ய சொல்லுங்கள் என கூறுகிறான். மேலும் விடிவதற்குள் வந்தால் தான் தருவேன், காலையில் போனை எடுக்க மாட்டேன் என கூறியுள்ளார்.

செம டுவிஸ்ட்

பாதிக்கப்பட்ட ஏழை பெருமாள் போலீசிடம், திருடன் தொலைபேசியில் பேசியது தொடர்பாக புகார் அளித்துள்ளார். இதனையடுத்து கரும்பு தோட்டத்திற்குள் பதுங்கியிருந்த திருடன் அய்யனாரை வரவழைத்த போலீசார், சுற்றி வளைத்து கைது செய்தனர். செல்போனுக்காக பேரம் பேசிய திருடன் அய்யனாரின் பேச்சு தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here