தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை மீனா, பின்னர் ரஜினிகாந்த், விஜயகாந்த், கமல்ஹாசன், சரத்குமார், சத்யராஜ், அஜித் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிப் படங்களிலும் அவர் நடித்திருக்கிறார். 2009 ஆம் ஆண்டு பெங்களூருவை சேர்ந்த வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்துகொண்ட நடிகை மீனாவுக்கு, நைனிகா என்னும் மகள் இருக்கிறார். மீனாவின் கணவர் வித்யாசாகர் நுரையீரல் நோயால் கடந்த 2022ல் காலமானார். நடிகை மீனாவின் நெருங்கிய தோழியான நடன இயக்குனர் கலா மாஸ்டர், Little Talks Youtube தளத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியில், மீனா அவரை திட்டியதாக கூறினார். மீனாவின் கணவர் 2022ல் காலமானார். அவர் இறக்கும்போது மீனாவிற்கு 39 வயதாகும். அதனால், அவர் இரண்டாவது திருமணம் செய்தால் என்ன என கலா மாஸ்டர் கேட்க, அதற்கு “உங்க வேலைய பாருங்க அக்கா, அதெல்லாம் ஒன்னும் வேணா, எனக்கு ஒரு பெண் குழந்தை இருக்கா” என கூறினாராம் மீனா.