தமிழ் சினிமா தயாரிப்பாளரான ரவீந்தர் சந்திரசேகர் சில சர்ச்சையான விஷயங்கள் குறித்து பேசி மக்களிடம் பிரபலம் ஆனவர். அதோடு பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்தும் தொடர்ந்து தனது விமர்சனங்களை பதிவு செய்து வந்தார். இவர் சீரியல் நடிகை மகாலட்சுமியை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின் இவர்கள் ஜோடியாக இருக்கும் புகைப்படங்கள் வெளியிட அது அதிகம் வைரலானது. இந்த நிலையில் தனது முதல் திருமண நாளை ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி சூப்பராக கொண்டாடியுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டு பெரிய பதிவு போட்டுள்ளார் நடிகை மகாலட்சுமி.















































