மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ள ஜீ தமிழ் தொலைக்காட்சி அழகிய காதல் கதை கொண்ட ‘இதயம்’ எனும் புதிய சீரியலை விரைவில் ஒளிபரப்ப இருப்பதாக அறிவித்துள்ளது.

புதிய சீரியல்

தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக இருந்து வருகிறது ஜீ தமிழ். இந்த தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்களுக்கு எப்போதும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. அதேபோல் ஜீ தமிழ் சேனலும் தொடர்ந்து புதுப்புது சீரியல்களை களமிறக்கி வருகிறது. அந்த வரிசையில் அடுத்ததாக ‘இதயம்’ என்ற சீரியல் ஒளிபரப்பாக இருப்பதாக ப்ரோமோ வெளியிட்டுள்ளது.

இனம் புரியாத உணர்வு

நாயகியின் காதல் கணவன் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைய, இன்னொரு நபர் இதயத்தில் பிரச்சனை ஏற்பட்டு உயிருக்கு போராட தனது கணவனின் இதயம் இந்த உலகத்தில் தொடர்ந்து துடிக்கட்டும் என்று தானம் செய்கிறாள் நாயகி. உண்மை காதலுக்கு என்றும் அழிவில்லை என்பதை உணர்த்தும் வகையில் இதய மாற்று அறுவை சிகிச்சையால் உயிர் பிழைக்கும் நபர் நாயகியை பார்க்கும் போதெல்லாம் அவனது இதயத்திற்குள் இனம் புரியாத உணர்வு ஏற்படுகிறது. அந்த நாயகிக்கும் அவளது குழந்தைக்கும் பாதுகாவலாக இருக்க வேண்டும் என்று அவன் நெஞ்சம் பதைக்கிறது. இப்படியான நிலையில் இவர்களின் வாழ்க்கையில் அடுத்ததாக நடக்கப் போவது என்ன என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில் ப்ரோமோ வீடியோ வெளியானது.

எதிர்பார்ப்பு

உடல் உறுப்பு தானத்தை ஊக்கப்படுத்தும் வகையிலும், வித்தியாசமான காதல் கதையாகவும் இருப்பதால் ‘இதயம்’ சீரியல் மீது அதிகமான எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த சீரியல் வரும் திங்கள் முதல் (ஆக., 28) மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சீரியலில் நாயகியாக ஜனனி அசோக் குமார் நடிக்க, நாயகனாக ரிச்சர்ட் ஜோஸ் என்பவர் நடிக்கிறார். கடலூரை சேர்ந்த வனிதா என்ற பெண் உடல்நலம் பாதிக்கப்பட்டு இதயத்தில் பிரச்சனை ஏற்பட்ட காதலனுக்கு இதயமாற்று அறுவை சிகிச்சை செய்து தனது காதலனை கரம்பிடித்த விஷயமும் இந்த சீரியல் கதையோடு ஒன்றிப் போவதாக ரசிகர்கள் பலரும் கருத்து கூறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here