ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதையடுத்து, நன்றி கூறும் நிகழ்ச்சி சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அப்படத்தின் இயக்குநர் நெல்சன், நடிகர்கள் சுனில், ஜாஃபர், வசந்த் ரவி, நடிகை மிர்னா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் நெலசன், “இவ்வளவு பெரியதாக வெற்றி பெற வேண்டும் என ‘ஜெயிலர்’ படத்தை எடுக்கவில்லை. நினைத்ததை சரியாக எடுக்க வேண்டும் என்று தான் செய்தோம். ரஜினிகாந்த் ரசிகர்கள் தான் இவ்வளவு பெரிய வெற்றிக்கு காரணம். நான் நினைத்ததைவிட படம் நன்றாக வந்துள்ளது என ரஜினிகாந்த் சொன்னது மன நிறைவாக இருந்தது” என்றார்.















































