ஜெயம் ரவி நடிப்பில் வெளியான எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை அசின், அதன்பின்னர் விஜய், சூர்யா, விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்தார். 2016 ஆம் ஆண்டு மைக்ரோ மேக்ஸ் நிறுவனர் ராகுல் சர்மாவை அவர் காதலித்து திருமணம் செய்துகொண்டார். அசின் – ராகுல் சர்மா தம்பதிக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகும் நிலையில், அவர்கள் இருவரும் தற்போது விவாகரத்து செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு சமூக வலைதளம் வாயிலாக பதிலளித்துள்ள நடிகை அசின், “நாங்களே ஜாலியாக டூர் செய்துக் கொண்டு பிரேக்பாஸ்ட் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது இப்படியொரு கொஞ்சம் கூட லாஜிக்கே இல்லாத ஒரு செய்தி வருவதை பார்த்து வேடிக்கையாகத்தான் இருக்கு. உங்களுக்கு வேற வேலை இல்லையா? இன்னும் பெட்டரா ஏதாவது டிரை பண்ணுங்க” என குறிப்பிட்டார்.