தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் ஹீரோவாக நடித்து வந்த ஆக்சன் கிங் அர்ஜூன், தற்போது வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். தற்போது நடிகர் விஜய்யுடன் இணைந்து லியோ படத்தில் அவர் நடித்து வருகிறார். நடிகர் அர்ஜுனுக்கு ஐஸ்வர்யா மற்றும் அஞ்சனா என இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் ஐஸ்வர்யா தமிழில் விஷாலுக்கு ஜோடியாக ‘பட்டத்து யானை’ படத்தில் நடித்திருந்தார். ஐஸ்வர்யா நீண்ட காலமாக தம்பி ராமையாவின் மகன் உமாபதியுடன் காதலில் இருந்து வருவதாகவும் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள விருப்பதாகவும் தகவல் பரவி வருகிறது. மேலும் அர்ஜுனும் தம்பி ராமையாவும் இணைந்து இருவரது திருமண தேதியை அறிவிப்பார்கள் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் இதுவரை இந்தத் தகவலை இரு தரப்பினரும் உறுதிப்படுத்தவோ மறுக்கவோ இல்லை.