மனநலம் குன்றிய பள்ளி குழந்தைகளுக்கு தேவையான உதவிகளை வழங்கிய நடிகை சித்தி இத்னானிக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் பேசும் நடிகை

தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சித்தி இத்னானி, சிம்புக்கு ஜோடியாக ‘வெந்து தணிந்தது காடு’ என்ற படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். அதன்பின் ஆர்யாவுக்கு ஜோடியாக ‘காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ படத்தில் அவர் நடித்தார். மராத்தி பெண்ணாக இருந்தாலும், தமிழில் சரளமாகப் பேசும் திறமை பெற்றுள்ள சித்தி இத்னானி, வெந்து தணிந்தது காடு படத்தில் தனது கேரக்டருக்கு அவரே டப்பிங் பேசியிருந்தார். 

‘என்ன மனசுப்பா’

அடிக்கடி முதியோர் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வரும் நடிகை சித்தி இத்னானி, தற்போது மனநலம் குன்றிய பள்ளி குழந்தைகளுக்கு தேவையான பொருட்களை வழங்கி அவர்களுடன் நேரத்தை செலவிட்டுள்ளார். இதுதொடர்பான புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள அவர், “நீங்கள் ஒருவருக்கு பரிசளிக்கக்கூடிய சிறந்த விஷயம் உங்கள் நேரம். லிட்டில் ஏஞ்சல்ஸில் உள்ள மனநலம் குன்றிய குழந்தைகளுடன் எனது மதியத்தை செலவிட்டேன். அவர்கள் முகத்தில் இருக்கும் புன்னகை விலைமதிப்பற்றது” என்று குறிப்பிட்டுள்ளார். நடிகை சித்தி இத்னானியின் இந்த செயலை பார்த்த ரசிகர்கள் ‘என்ன மனசுப்பா’ என்று பாட்டியும், வாழ்த்தியும் கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here