உதயநிதி ஸ்டாலினுக்கு சினிமாவை விட அரசியலில் முக்கியமான பொறுப்புகள் காத்திருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன் தெரிவித்திருக்கிறார்.

பிரம்மாண்ட விழா

உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ‘மாமன்னன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், நடிகர்கள் கமல்ஹாசன், சிவகார்த்திகேயன், எஸ்.ஜே.சூர்யா, தயாரிப்பாளர் போனி கபூர், இயக்குநர்கள் ஏ.ஆர். முருகதாஸ், மிஷ்கின் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

காத்திருக்கும் பொறுப்பு

‘மாமன்னன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசனிடம் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது; “மாமன்னன் திரைப்படம் தான் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் கடைசி திரைப்படம். இதுதான் கடைசி படம் என்றதும் அவருக்கு கொஞ்சம் வருத்தம் இருந்தது. அதன்பிறகு தற்போது இருக்கும் வேலைகளில் உதயநிதி ஸ்டாலின் கவனம் செலுத்தி வருகிறார். சினிமாவை விட அரசியலில் உதயநிதி ஸ்டாலினுக்கு முக்கியமான பொறுப்புகள் காத்திருக்கிறது. அதை அவர் சிறப்பாக செய்வார் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. அரசியலில் உதயநிதி ஸ்டாலின் மேலே வருவார்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here