பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மீனா கதாபாத்திரத்தில் நடிக்கும் ஹேமா தனது மேக் அப் இல்லாமல் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
பொறுப்பான மருமகள்
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ஹேமா ராஜ்குமார். அண்ணன் தம்பி பாசத்தை மையமாக வைத்து இந்த தொடர் உருவாக்கப்பட்டது. ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக ஜீவா மற்றும் கண்ணன் குடும்பத்தைவிட்டு பிரிந்துவிட்டனர். அது மட்டும் இல்லாமல் தற்போது கடைசி தம்பியான கண்ணன் வாங்கிய கடனுக்காக குடும்பமே பிரச்சனையில் சிக்கித் தவிக்கின்றது.
மேக்கப் இல்லாத மீனா
இந்த தொடரில் மீனா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஹேமா ராஜ்குமார் (ஜீவா மனைவி), ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான கதாபாத்திரம். அது மட்டும் இல்லாமல் இவரது நடிப்புக்கும், குணத்திற்கும் பல ரசிகர்களும் உள்ளனர். ஹேமா சொந்தமாக யூடியூப் சேனல் நடத்தி, அதில் அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள் உள்ளிட்ட தகவல்களை வீடியோக்களாக பதிவிட்டு வருகிறார். அடிக்கடி போட்டோஷூட் புகைப்படங்களையும் வெளியிட்டு வரும் ஹேமா ராஜ்குமார், சமீபத்தில் மேக்கப்பே இல்லாத தனது புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மேக்கப் இல்லாமல் நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் என்று கமெண்டுகள் மூலம் ஹேமாவை வர்ணித்து வருகின்றனர்.