ஐந்தாவது முறையாக வெற்றி பெற்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
இறுதிப் போட்டி
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாத இறுதியில் தொடங்கப்பட்டது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த போட்டி நேற்று முடிவடைந்தது. இறுதிப் போட்டியில் கடந்த ஆண்டு சாம்பியன் பட்டம் என்ற குஜராத் டைட்டன்ஸ் அணியும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின.
இலக்கு
இதில் டாஸ் வென்ற சென்னை அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதை அடுத்து கிளம்பிறங்கிய குஜராத் அணி கடுமையாக விளையாடி 215 ரன்கள் குவிதது. இதையடுத்து சென்னை அணி களம் இறங்கிய போது மழை வந்ததால் ஆட்டம் 15 ஓவர்களாக குறைக்கப்பட்டு எடுக்க வேண்டிய ரன்கள் 171 ஆக மாற்றி அமைக்கப்பட்டது.
கண்கலங்கிய தோனி
இந்த கடின இலக்கை வைத்துக்கொண்டு விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள், கடைசி பந்தில் பவுண்டரி அடித்து அபார வெற்றியை பெற்றனர். இந்த வெற்றியின் மூலம் ஐந்தாவது முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வென்று அசத்தியுள்ளது. வெற்றி பெற்றவுடன் கேப்டன் தோனி சந்தோஷத்தில் கண்கலங்கியது அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்தது.
மினி கோடம்பாக்கம்!
இந்த கிரிக்கெட் போட்டியை நேரில் காண அகமதாபாத்துக்கு சினிமா பிரபலங்கள் குவிந்தனர். மினி கோடம்பாக்கம் என்று சொல்லும் அளவிற்கு அங்கு சினிமா பிரபலங்கள் குவிந்திருந்தனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றவுடன் ஆரவாரம் செய்து கொண்டாடினர். இந்த வெற்றியால் சென்னை அணிக்கு வாழ்த்துக்களும், பாராட்டுகளும் குவிந்து வருகின்றது. இதுகுறித்து கிரிக்கெட் வெறியர்களின் வீடியோவும், சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகின்றது. வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சினிமா பிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை சமூக வலைத்தளத்தில் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.