ஜூன் 3ஆன் தேதி 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு மாணவர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார் நடிகர் விஜய்.
ஷூட்டிங் பிஸி
விஜய் தற்போது லோகேஷ் இயக்கும் லியோ படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கும் தளபதி 68 படத்தில் நடிக்கவும் கமிட்டாகியுள்ளார். இன்னொரு பக்கம் அடிக்கடி தனது மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்து வருகிறார் விஜய். இதன் அடுத்தகட்ட நடவடிக்கையாக 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு மாணவர்களை சந்திக்கவும் விஜய் திட்டமிட்டுள்ளார். அதேபோல், விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் பல்வேறு சமூகப் பணிகளில் பங்கெடுத்து வருகின்றனர். இதனால், விஜய் அரசியலில் களமிறங்குகிறாரா என்ற கேள்வி எழுந்தது.
அரசியல் ஆர்வம்
சென்னை, மதுரவாயலில் உள்ள தனியார் மண்டபத்தில் வரும் ஜூன் 3ம் தேதி 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை சந்திக்க உள்ளார். தொகுதிக்கு 6 மாணவர்கள், 2 பெற்றோர்கள் என 234 தொகுதிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட சுமார் 6,000 பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.இதனால், விஜய் அரசியலில் களமிறங்குகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அடுத்தாண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் விஜய் போட்டியிடலாம் எனவும் அதற்கான முன்னோட்டமாக மாணவர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இது குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாக வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.















































