STR 48 படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடிக்க நடிகை தீஷா பதானியிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாறும் நடிகைகள்
நடிகர் சிம்புவின் STR 48 படத்தை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளது. தேசிங் பெரியசாமி இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என கூறப்படுகின்றது. இதுவரை இந்த படத்தில் நடிக்கப் போகும் மற்ற நடிகர், நடிகைகள் குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. ஆரம்பத்தில் இப்படத்தில் நடிக்க நடிகை தீபிகா படுகோனிடம் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் அவர் சிம்புவை விட பல மடங்கு சம்பளம் அதிகமாக கேட்டதால், நடிகையை மாற்ற திட்டமிட்ட படக்குழு நடிகை கீர்த்தி சுரேஷிடம் பேசி இப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் இப்போது இதிலும் குழப்பம் வந்துள்ளது. தற்போது சிம்புவிற்கு ஜோடியாக திஷா பதானி நடிப்பதாக கூறப்படுகிறது.
வேலைகள் துவக்கம்?
இப்படம் குறித்து வேற எந்த ஒரு தகவலும் வெளிவராத நிலையில், எப்போது இந்த படத்தின் சூட்டிங் தொடங்கப்படும் என்று ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். சமீபத்தில் கமல்ஹாசன், இயக்குநர் தேசிங் பெரியசாமி, சிம்பு ஆகியோர் சந்தித்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வேகமாக பகிரப்பட்டது. ஆனால் இதுகுறித்து எந்த ஒரு தகவலையும் இதுவரை ராஜ்கமல் பிலிம்ஸ் குறிப்பிடவில்லை. ஆனால் இப்படத்தில் வேலைகள் விறுவிறுப்பாக தொடங்கி இருப்பதால் தான் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளதாக கூறப்பட்டது. விரைவில் STR 48 திரைப்படம் குறித்து அப்டேட் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இருந்தும் இப்படத்தின் ஹீரோயின் குறித்து தொடர்ந்து குழப்பம் நிலவி வருவதால் ரசிகர்கள் அப்செட்டில் உள்ளனர். தற்போது ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படும் நடிகை தீஷா, பாலிவுட்டில் பிரபலமாக இருக்கக்கூடியவர். தற்போது சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் கங்குவா படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.