சமூக வலைதளங்களில் வைரலாகும் நடிகை ரம்யா கிருஷ்ணனின் லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரை புகழந்து தள்ளி வருகின்றனர்.
உலக அளவில் ஃபேமஸ்
வெள்ளை மனசு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை ரம்யா கிருஷ்ணன், படிக்காதவன், சர்வம் சக்தி மயம், முதல் வசந்தம், ஆண்களை நம்பாதே உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். அதன்பிறகு பல படங்களில் நடித்து வந்த ரம்யா கிருஷ்ணனுக்கு படையப்பா படத்தில் நீலாம்பரி கதாபாத்திரம் வேற லெவல் ஹிட் கொடுத்து டாப் நடிகையாக மாற்றியது. இன்றும் நீலாம்பரி என்று அழைக்கும் அளவிற்கு இவருக்கு அந்த கதாபாத்திரம் நல்ல பெயரை பெற்று கொடுத்தது. அதன்பிறகு பாட்டாளி, ராஜகாளி அம்மன், பட்ஜெட் பத்மநாபன், பஞ்சதந்திரம் உள்ளிட்ட படங்களும் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது. 2015 ஆம் ஆண்டு வெளியான பாகுபலி படத்தில் சிவகாமி என்ற கதாபாத்திரம் மீண்டும் சூப்பர்ஹிட் படமாக அமைந்தது. இவரது கதாபாத்திரம் உலக அளவில் இவரை ஃபேமஸ் ஆக்கியது. நடிகை ரம்யா கிருஷ்ணன் தற்போது ரஜினியுடன் இணைந்து ஜெய்லர் படத்தில் நடித்து வருகிறார்.
இளமை அழகு
தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளிலும் நடிகை ராமகிருஷ்ணன் அசத்தி வருகிறார். ஆரம்பத்தில் இருந்து இன்று வரை தனது இளமையை பாதுகாத்து வரும் ரம்யா கிருஷ்ணன், அடிக்கடி போட்டோஷூட் புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வரும் ரம்யா கிருஷ்ணன், இன்றும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளார் என்று சொன்னால் அது மிகையாகாது. சமூக வலைதளத்தில் பிஸியாக இருக்கம் நடிகர் ரம்யா கிருஷ்ணன், சமீபத்தில் வெளியிட்டுள்ள போட்டோ ஷூட் புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ஸ்லீவ்லெஸ் பிளவுஸ், பூ போட்ட புடவை என இந்த வயதிலும் படு ரொமான்டிக்காக இருக்கும் நடிகை ரம்யா கிருஷ்ணன் புகைப்படங்களுக்கு லைக்குகளும், ஹார்டின்களும் குவிந்த வண்ணம் உள்ளது. அது மட்டும் இல்லாமல் “வயசானாலும் உங்க ஸ்டைலும், அழகும் உங்களை விட்டு போகல” என்று கமெண்ட்கள் குவிந்து வருகின்றன.