“லாலாகுண்டா பொம்மைகள்” ஆன்தாலஜி தொடரின் மூலம் பிரபலமான நடிகை ஸ்ரீ கௌரி பிரியா தமிழில் இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
வடசென்னை பெண்
நகர்ப்புற காதலையும், அதைச்சுற்றி நடக்கும் சிக்கல்களையும் காட்டும் ஆன்தாலஜி தொடர் “மாடர்ன் லவ் சென்னை” அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகி உள்ளது. இதில் முதல் படமாக இடம்பெற்று இருப்பது தான் ராஜூ முருகனின் ‘லாலாகுண்டா பொம்மைகள்’. இதில் ஷோபா என்ற கதாபாத்திரத்தில் ஸ்ரீ கௌரி பிரியா நடித்துள்ளார். மிஸ் ஹைதராபாத்தில் தேர்வு செய்யப்பட்ட பிறகு, இவர் தெலுங்கில் பிஸியாக இருந்து வருகிறார்.
தமிழில் என்ட்ரி
தமிழில் என்ட்ரி கொடுக்க முயற்சி செய்து வரும் நடிகை ஸ்ரீ கௌரி பிரியா, இந்த ஆன்தாலஜி “லாலாகுண்டா பொம்மைகள்” தொடரின் மூலம் ரசிகர்களை கவர்ந்துள்ளார். வடசென்னை பெண்ணாக நடித்துள்ள இவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது. அது மட்டும் இல்லாமல் தற்போது தமிழில் இரண்டு படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் நடிப்பதற்கு கவனம் செலுத்தி வரும் இவர், பல முன்னணி இயக்குநர்களிடத்தில் கதை கேட்டு வருகிறார்.