STR 48 படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம்

நடிகர் சிம்புவின் STR 48 படத்தை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளது. தேசிங் பெரியசாமி இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என கூறப்படுகின்றது. இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. STR 48 படத்தில் நடிக்கப் போகும் நடிகர், நடிகைகள் குறித்து எந்த ஒரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை. ஆரம்பத்தில் இப்படத்தில் நடிக்க நடிகை தீபிகா படுகோனிடம் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் அவர் படத்தின் ஹீரோ சிம்புவைவிட பல மடங்கு அதிகமாக சம்பளம் கேட்டதால், நடிகையை மாற்ற திட்டமிட்ட படக்குழு நடிகை கீர்த்தி சுரேஷிடம் பேசி இப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

துவங்கிய வேலைகள்

STR 48 படm குறித்து வேற எந்த ஒரு தகவலும் வெளிவராத நிலையில், எப்போது இந்த படத்தின் சூட்டிங் தொடங்கப்படும் என்று ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் சிம்பு தாய்லாந்து, லண்டன் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று வந்திருந்தார். ஆனால் இதுவும் இப்படத்திற்காக தான் எனவும் கூறப்படுகின்றது. அதுமட்டுமில்லாமல், சமீபத்தில் கமல்ஹாசன், இயக்குநர் தேசிங் பெரியசாமி, சிம்பு ஆகியோர் சந்தித்துக்கொண்ட புகைப்படங்களும் சமூக வலைதளத்தில் வேகமாக பகிரப்பட்டது. ஆனால் இதுகுறித்து எந்த ஒரு தகவலையும் இதுவரை ராஜ்கமல் பிலிம்ஸ் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் வேலை விறுவிறுப்பாக தொடங்கி இருப்பதால்தான், இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளதாகவும் கூறப்பட்டது. விரைவில் STR 48 படம் குறித்த அப்டேட் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here