கர்நாடக தேர்தலில் சந்தித்த படுதோல்வியை மறைக்கவே ரூ.2000 நோட்டு திரும்ப பெறும் நடிவடிக்கை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
செல்லாது
கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் பண மதிப்பிழப்பு செய்யப்பட்டது. அதற்கு பதில் புதிதாக ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. தற்போது புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன. இதனிடையே, நாட்டில் புழக்கத்தில் உள்ள ரூ.2000 நோட்டு செப்டம்பர் 30 ஆம் தேதி முதல் செல்லாது என்று ரிசர்வ் வங்கி நேற்று அறிவித்துள்ளது. தற்போது ரூ.2000 நோட்டு வைத்திருப்பவர்கள் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
ஒற்றைத் தந்திரம்
இந்நிலையில், ரூ.2000 நோட்டை திரும்ப்பெறும் நடவடிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்ல்; “500 சந்தேகங்கள், 1000 மர்மங்கள், 2000 பிழைகள்! கர்நாடக படுதோல்வியை மறைக்க ஒற்றைத் தந்திரம்! 2 ஆயிரம் ரூபாய் பணமதிப்பிழப்பு நடவடிக்கை” என குறிப்பிட்டுள்ளார்.