உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளியான வேட்டையாடு விளையாடு திரைப்படம் ரீ ரிலீஸ் ஆக உள்ளது.
பிளாக் பஸ்டர் ஹிட்
2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியான வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசன், ஜோதிகா, கமாலினி முகர்ஜி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்திற்கு, ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்திருந்தார். இப்படத்தில் பிரகாஷ்ராஜ், டேனியல் பாலாஜி, சலீம் உள்ளிட்ட பலரும் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ரூ.24 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.50 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.

ரீ ரிலீஸ்
ஆக்ஷன் க்ரைம் திரில்லராக உருவாக்கப்பட்டிருந்த இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதும் குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படம் வெளியாகி 17 ஆண்டுகளுக்குப் பிறகு தற்பொது ரீ ரிலீஸ் ஆக இருப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது. புதுப் பொலிவுடன் உருவாகி வரும் வேட்டையாடு விளைய்யாடு திரைப்படம் ஜூன் மாதம் வெளியாக உள்ளதாக அறிவித்துள்ளனர்.
இந்தியன் 2
கமல்ஹாசன் தற்போது லைகா தயாரிப்பில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல் பாகம் மிகப்பெரிய வெற்றி அடைந்ததை தொடர்ந்து, இரண்டாவது பாகத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. இப்படத்தின் 90% படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், இன்னும் சில காட்சிகள் மட்டும் படமாக்கப்பட வேண்டியுள்ளது. தற்போது ஷங்கர் ராம்சரண் நடிக்கும் கேம் சேஞ்சர் திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளை படமாக்கிக் கொண்டிருக்கிறார். அதை முடித்தவுடன் இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கும் என்று கூறியிருந்தார். இந்தியன் 2 திரைப்படத்தை பொங்கலுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர்.















































