இன்று திரையரங்குகளில் வெளியான பிச்சைக்காரன் 2 திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது.
மெகா ஹிட் பிச்சைக்காரன்
2016 ஆம் ஆண்டு வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தில் விஜய் ஆண்டனியின் நடிப்பு மிக பிரம்மாண்டமாக பேசப்பட்டது. இந்த படத்தை தொடர்ந்து பிச்சைக்காரன் இரண்டாம் பாகத்தை விஜய் ஆண்டனி இயக்கி நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் காவியா தாபர், ரித்திகா சிங், மன்சூர் அலிகான், ராதாரவி, ஜான் விஜய், தேவ் கில் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த திரைப்படம் நல்ல வரவேற்பு பெரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் தற்போது இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருவது பட குழுவினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கலவையான விமர்சனம்
இந்த திரைப்படத்தை வெளியிடக் கூடாது என்று பல தரப்பிலும் பலமான எதிர்ப்பு கிளம்பிய போதிலும், பல தடைகளை தாண்டி திரையரங்குகளில் இன்று வெற்றிகரமாக வெளியானது. பிச்சைக்காரன் 2 படத்தை பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். பிச்சைக்காரர்களின் மூளையை பணக்காரனுக்கு மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட அவன் செய்யும் வேலை தான் இந்த படத்தின் கதை. இந்த கான்செப்ட் ரசிகர்களுக்கு பிடித்து விட்டால் பிச்சைக்காரன் 2 படமும் பிடித்து போகும் என்றும் கருத்துக்கள் வெளிவந்துள்ளது. இன்னும் சிலர் பிச்சைக்காரன் முதல் பாகம் போல் இரண்டாம் பாகம் இல்லை என்றும் சசி சிறந்த இயக்குநர் விஜய் ஆண்டனி இப்போது தான் டைரக்ஷன் கற்றுக் கொள்கிறார் என்றும் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த வார இறுதியில் இப்படத்திற்கு கிடைக்கும் ரெஸ்பான்ஸ் பொருத்து இப்படத்தின் வெற்றி தோல்வி குறித்து முழு விவரம் தெரிய வரும்.















































