நடிகர் சர்வானந்த்-ரக்ஷிதா ரெட்டி திருமண தேதி வெளியிடப்பட்டுள்ளது.
சில தமிழ் படங்கள்
தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கக்கூடிய சர்வானந்த் 2004 ஆம் ஆண்டு சினிமாவில் அறிமுகமானார். தமிழில் 2009 ஆம் ஆண்டு நாளை நமதே என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு எங்கேயும் எப்போதும், ஜேகே என்னும் நண்பனின் வாழ்க்கை, உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தார் சர்வானந்த். இவருக்கு சாப்ட்வேர் இன்ஜினியர் ரக்ஷிதா ரெட்டி என்பவருடன் ஜனவரி மாதம் 26 ஆம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
திருமண தேதி வெளியீடு
சில தினங்களுக்கு முன்பு இவர்களது திருமணம் நிறுத்தப்பட்டதாக சில வதந்திகள் பரவி வந்தது. ஆனால் சர்வானந்த் குடும்ப நண்பர் ஒருவர் இதனை முற்றிலுமாக மறுத்து இருந்தார். சர்வானந்த் 40 நாட்கள் லண்டனில் படப்பிடிப்பிற்காக சென்று விட்டு ஹைதராபாத் திரும்பி உள்ளார் எனவும், திருமண வேலைகள் விரைவில் துவங்கும் என்றும் அவர் கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது திருமண தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ஜெய்ப்பூரில் உள்ள லீலா பேலஸில் அடுத்த மாதம் அதாவது ஜூன் மூன்றாம் தேதி இவர்களுக்கு திருமணம் நடக்க போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு மூலம் இவர்களது திருமண வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. சினிமாவில் 20 வருடங்களை கடந்துள்ள சர்வானந்த்துக்கு ரசிகர்கள் திருமண வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.















































