நடிகர் அமிதாப் பச்சனுக்கு லிப்ட் கொடுத்த நபருக்கு மும்பை போலீஸ் அபராதம் விதித்துள்ளனர்.
ஹெல்மெட் அணியவில்லை
சமீபத்தில் ஷூட்டிங் செல்வதற்காக காரில் புறப்பட்ட நடிகர் அமிதாப் பச்சனின் ட்ராபிக் நெரிசலில் சிக்கியதால் அங்கு இருக்கும் நபரிடம் லிப்ட் கேட்டு பைக்கில் படப்பிடிப்புக்கு சென்றார். இந்த வீடியோ சமீபத்தில் வைரலாக பரவியது. சமூக வலைதளவாசிகள் அவரது எளிமையை பாராட்டியது மட்டும் இல்லாமல் அவருக்கு ஆப்பும் வைத்துவிட்டனர். அதாவது பைக்கில் செல்லும்போது ஹெல்மெட் கூட அணியாமல் சென்றதற்காக அவரை இணையதளவாசிகள் விமர்சனம் செய்து வந்தனர். அவரை சமூக வலைதளத்தில் கேள்வி கேட்பது மட்டும் இல்லாமல் மும்பை போலீஸை டேக் செய்து, இதையெல்லாம் கேட்க மாட்டீர்களா என்று கேள்வி எழுப்பி வந்தனர். இதேபோல் சமீபத்தில் விராட் கோலியின் மனைவியும், நடிகையுமான அனுஷ்கா சர்மா பைக்கில் லிப்ட் கேட்டு சென்ற புகைப்படமும், வீடியோவும் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவிய நிலையில் அவரையும் தற்போது கேள்வி கேட்டு வந்தனர். இதற்கு பதிலளித்துள்ள மும்பை போலீஸ் கண்டிப்பாக ஹெல்மெட் அணியாமல் சென்ற குற்றத்திற்காக அபராதம் விதிக்கப்படும் என்று கூறியிருந்தது.
போலீஸ் அபராதம்
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த மும்பை போலிசார் அமிதாப் பச்சனை அழைத்துச் சென்ற நபருக்கு ரூ.1000 அபராதம் விதித்துள்ளனர். நடிகை அனுஷ்கா சர்மாவை அழைத்துச் சென்ற நபருக்கு ரூ.10,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு அபராதத் தொகை ரசீதுக்கான நகல்களையும் மும்பை போலிஸார் தங்களது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.