மலையாளம் மற்றும் ஹிந்தியில் பிரபல நடிகையாக இருக்கக் கூடிய நடிகை இஷா தல்வாருக்கு கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
மலையாளத்தில் பிரபலம்
2013 ஆம் ஆண்டு வெளியான தில்லு முல்லு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை இஷா தல்வார். பாலிவுட் மற்றும் மலையாளத்தில் பிரபலமாக இருக்க கூடிய இவர், தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார். தமிழில் இவர் நடிப்பில் வெளியான மீண்டும் ஒரு காதல் கதை, ரன் பேபி ரன் உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவை. குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான இஷா, ஆரம்பத்தில் மலையாள படங்களில் மட்டுமே நடித்து வந்தார். அதன்பிறகு பல மொழிகளிலும் நடித்து வரும் இவர், தற்போது “சாஸ் பஹு அவுர் பிளமின்கோ” என்ற ஹிந்தி வெப் தொடர் ஒன்றில் நடித்து வருகிறார்.
கண்ணில் காயம்
இந்த வெப் தொடரின் ஷூட்டிங்கின் போது எதிர்பாராத விபத்து காரணமாக அவரது கண்ணில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த படத்தின் ஆக்ஷன் காட்சிகள் இரவில் படமாக்கப்பட்டு கொண்டிருக்கும் பொழுது வெடிப்பொருட்கள் வெடித்ததில் இஷா தல்வார் இடது கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த இவர், மூன்று நாட்கள் கண்கள் திறக்கக்கூடாது என்ற மருத்துவர்கள் அறிவுறுத்தியதால் கண்களை திறக்காமல் இருந்துள்ளார். காயங்கள் சரியாகி பூரண குணமடைந்த பிறகு, தான் படப்பிடிப்பில் கலந்துகொண்டதாக கூறியுள்ளார் நடிகை இஷா தல்வார். கடந்த மே 5 தேதி முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில் டிம்பிள் கபாடியா, ராதிகா மதன் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.